கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சிமன்ற தலைவர்கள் கூண்டோடு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது பாரதிய ஜனதா.,வினர் இடையே மகிழ்ச்சியையும் திமுகவினர் மத்தியில் பீதியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.பாஜகவில் இணைந்துள்ள 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தனதுபரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் முழு விவரம் பின்வருமாறு:-
திமுக அரசின் அராஜக போக்கால் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் ஈர்க்கப்படும், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் சோழன் பழனிச்சாமி முன்னிலையில் இணைத்துக்கொண்டனர். 4-7-2022 அன்று கடலூர் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர்கள் தீர்மானம் மூலம் நிறைவேற்றமுயன்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் திமுக அரசின்கீழ் செயல்படும் அரசு எந்திரங்களில் இருக்கும் கோளாறு, ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் காரணம். மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றங்களுக்கு 2021 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய நிதிகூட விடுவிக்காததால்.
கடலூரில் அமைந்துள்ள பலஊராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. திமுக அரசு ஊராட்சி மாற்றங்களுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக பாஜக பக்கபலமாக இருக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் அழித்துவிட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கும் 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் எனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |