மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. நிவர் என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்தப்புயல், நாளை மறுதினம் 25-ம் தேதி மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம் என்றும், அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும்வீசும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவில் நிலைப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் இருக்கும் கடலோர கிராமங்களையும், தற்காலிகத்தங்கும் முகாம்களையும் ஆய்வுசெய்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர், அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, “கடலூரில் தற்சமயம் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. உள்ளூர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடியவை. அதில் 92 இடங்கள் மிக அதிகமாகப் பாதிப்புகளை சந்திக்கக்கூடியவை. அதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்களை 19 மண்டல அலுவலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்கள் மற்றும் புயல் மையங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். மாவட்டத்தில் 28 புயல்மையங்களும், 14 பல்நோக்கு மையங்களும், 191 தற்காலி தங்குமிடங்களையும் அமைத்திருக்கிறோம்.

குடிமைப்பொருள் துறையின் மூலம் 16 இடங்களில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். மாவட்டம் முழுவதிலும் இருக்கும் புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு முகாம்களாக மாற்றும்பணிகளை நேற்றே தொடங்கிவிட்டோம். மாநிலபேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 220 பேர் அந்தந்தப் பகுதிகளில் தயராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். தேவைப்படும்போது இவர்கள் மண்டல குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவர்களைத் தவிர தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 126 வீரர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதில் 3 குழுக்கள் கடலூரிலும், மூன்றுகுழுக்கள் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 180 ஜென்செட்டுகள், 180 ஜெனரேட்டர்கள், 180 ஜே.சி.பி இயந்திரங்கள், 1 லட்சம் மணல் முட்டைகள், 100 டிரான்ஸ்பார்மர், மின் இணைப்புக் கம்பிகள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. மேலும் மீன்வளத் துறை மூலம் 59 ஃபைபர் படகுகள், 18 ரப்பர் படகுகள், 4,500 லைஃப் ஜாக்கெட்ஸ் (பாதுகாப்பு ஆடைகள்) தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தபடகுகளை இயக்குவதற்கும் அந்தந்த பகுதிகளில் ஆள்கள் தயாராக இருக்கிறார்கள்.

நவம்பர் 21-ம் தேதியில்இருந்தே கடலுக்குள் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு நாங்கள் கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில், யாரும் கடலுக்குள் செல்லவில்லை. அவர்களின் படகுகள், வலைகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். தற்காலிக பாதுகாப்பு மையங்களில் இட்லி மாவுகூட அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...