புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம்

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, 2,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்ந்து, முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில், தமிழக புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தால் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில், மத்திய வேளாண் துறை எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டு பிரிவு இயக்குனர் பொன்னுசாமி, நிதித்துறையின் செலவினங்கள் பிரிவு இயக்குனர் சோனாமணி ஹோபம், மத்திய நீர்வள ஆணைய, சென்னை மண்டல இயக்குனர் சரவணன்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக சென்னை மண்டல செயற்பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய மின்சார துறை உதவி இயக்குனர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி உள்ளிட்ட, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை வந்துள்ள இக்குழுவினர், நேற்று மாலை முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத பாதிப்பு குறித்த அறிக்கையை, குழுவிடம் முதல்வர் வழங்கினார். அதில் நிரந்தர ம்றறும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக 6,675 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் மூன்று குழுவாக பிரிந்து சென்று, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில் ஆய்வை முடித்து, புதுச்சேரி மாநிலத்திலும் சில பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக, 944.8 கோடி ரூபாயை வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய குழு ஆய்வுக்கு பின், கூடுதல் நிவாரண நிதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...