மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஸ்வீடன் இந்தியா நினைவுவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்திய ஸ்வீடன் சுகாதார புதுமை மையம்-‘சுகாதார உரையாடல்’ என்னும் வருடாந்திர மாநாட்டை இன்று தொடங்கிவைத்து, அதற்குத் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசியவர், “கடந்த 10 மாதங்களாக கொவிட்-19 பெருந்தொற்றால் இந்தபூமியில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பேசாமல் எந்தசுகாதாரம் தொடர்பான கலந்துரையாடலும் நிறைவுபெறாது. சவால்களை எதிர்கொள்வதற்கு பொறுப்புகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தப் பெருந்தொற்று நமக்குக் கற்று தந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாதவகையில் உலக நாடுகளுடன் இணைந்து நாம் செயல்படவேண்டும். இதை கருத்தில் கொண்டே இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளின் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்”, என்று கூறினார்.
இந்திய ஸ்வீடன் சுகாதார புதுமை மையம், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைசிறந்த புற்று நோய் மையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |