மேற்கு வங்க டிஜிபி ,தலைமைச் செயலருக்கு சம்மன்

மேற்குவங்கத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்றவாகனம் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க தலைமைச் செயலாளரும், காவல்துறை டிஜிபியும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குநிலவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமைகுறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கரின் அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் நட்டாவின் வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை மாநில அரசுதரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தத்தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் காா் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலா்காயமும் அடைந்தனா்.

One response to “மேற்கு வங்க டிஜிபி ,தலைமைச் செயலருக்கு சம்மன்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.