புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா

‘‘புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்பாரத்) உருவாக்கத்துக்கு அடிப்படை தாரகமந்திரங்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐஐஎம் கல்விமையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மேலும் கூறியதாவது:

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ஒருங்கிணைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றுடன் மாறிவரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை ஏற்கும் நிர்வாகமும் மிக அவசியம். பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில் தொழில்நுட்பத்துக்கு மிகமுக்கிய பங்கு உள்ளது. டிஜிட்டல் இணைப்பு மூலம்தான் விரைவான வளர்ச்சியை இந்தியா எட்டமுடியும். அதற்கு நிர்வாக ரீதியில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் உலகளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா முன்னேற முடியும்.

தொழில்நுட்ப நிர்வாகம் என்பது மனிதவள நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும். கடந்த சிலஆண்டுகளாக மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களால் உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனாவைரஸ் பரவலை இந்தியாவால் திறம்பட கையாள முடிந்தது.

உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேசளவில் பிரபலப்படுத்த சிறந்த நிர்வாகமும், தொழில்நுட்பமும் அவசியம். இதை இளைய தலைமுறையினர் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டால், நாடு அதன் இலக்கை எட்டமுடியும்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் அமையவுள்ள ஐஐஎம் வளாகம் இம்மாநிலத்துக்கு புதிய அடையாளத்தை நிச்சயம் ஏற்படுத்தும். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் பாரம்பரிய தொழிலான கைத்தறி உள்ளிட்ட பிறதொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...