இந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசிதிட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப் படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன் சீரம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதை ஏற்று தலைமை மருந்துகட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்ட்(சீரம்) மற்றும் கோவாக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு நேற்று அனுமதி அளித்து. இதையடுத்து இந்தியாவில் தடுப்பூசிவழங்கும் பணிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நேஷனல் மெட்ரோலஜி கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிகாட்சி வாயிலாகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது.

இதற்காக, உழைத்த அனைத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைக்கண்டு, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.

மேட் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதை மட்டுமின்றி, அவை உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

எண்ணிக்கைகளை போலவே தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியா திட்டத்தில் நமதுபயணத்தில் எண்ணிக்கைகளோடு சேர்ந்து நமது தயாரிப்புகளின் தரமும் உயர வேண்டும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...