நாடுமுழுவதும் 200 கோடி டோஸ் கோவிட் தடுப் பூசி இந்தியா சாதனை . மோடி பாராட்டு

நாடுமுழுவதும் 200 கோடி டோஸ் கோவிட் தடுப் பூசி செலுத்தப் பட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப் படுகின்றன. இருதவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர்டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி செலுத்திவருகிறது. தற்போதைய சூழலில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 17) காலை 8 மணி நிலவரப்படி 199.98 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று 200 கோடிடோஸ் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா மிகப் பெரிய சாதனை புரிந்துள்ளது. இச்சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவர் தெரிவித்ததாவது: மீண்டும் இந்தியா வரலாறு படைத்துள்ளது. 200 கோடி டோஸ் தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனதுவாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களைப் பற்றி பெருமைப் படுகிறேன். கோவிட்டுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்திஉள்ளது. இந்தியமக்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதிசெய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மனஉறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...