உலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,

இந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு
அந்தவரிசையில் இந்தியாவும் இணைந்து அசத்துகின்றது, உலகளவில் மிகபெரிய சாதனையாக இந்தியா கொரோனாவுக்கு தடுப்புபோடுவது உலக அளவில் மிகபெரிய அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கபடுகின்றது.

அமெரிக்காவின் பைசர் மருந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்து, சீனாவின் சின்னபோம் மருந்தினை போல இந்தியாவும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் எனும் இருமருந்துகளை தயாரித்துவிட்டது, தயாரித்து தன் மக்களுக்கு விநியோகித்து பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிவிட்டது. 40 கோடிக்கும் கீழான மக்கள் தொகையினை கொண்ட அமெரிக்கா தடுமாறிகொண்டிருக்கும் பொழுது, அதே அளவில் பாதிகொண்ட அதாவது சுமார் 15 கோடி மக்களை கொண்ட ரஷ்யாவும் தடுமாறும் பொழுது 120 கோடி மக்களை கொண்ட இந்தியா மிகஅழகாக தன் குடிமக்களை காக்க தொடங்கிவிட்டது.

சீனாவின் மக்கள் தொகை பெரிது அங்கு சீன தடுப்பு மருந்து கொடுக்கபட்டாலும் அதன் தன்மை தெரியவில்லை இன்னொன்று எவ்வளவுபேருக்கு செலுத்தபட்டது எனும் தகவலுமில்லை அது விற்கபட்ட நாடுகளில் வரவேற்புமில்லை. இந்தியாவின் மருந்து நம்பகமானது என உலகநாடுகள் கருதுகின்றன, வரபோகும் காலங்கள் அதை உறுதிபடுத்தும்.

மோடி அரசின் ஆக சிறந்த சாதனை இது, உலகபோர் ஒன்றில் இருந்து மக்களைமீட்ட அதிசயம் இது.வளைகுடாவின் பணக்கார நாடுகள், கிழக்காசியாவின் செல்வவள நாடுகள் , ஐரோப்பிய நாடுகளெல்லாம் இந்தியாவினை பார்த்து ஏக்கபெருமூச்சு விடுகின்றன. என்ன விலை கொடுத்தாலும் வாங்க தயாராகின்றன‌ ஆனால் எம் மருந்து எம் குடிமக்களுக்கே என இந்தியருக்கு வழங்கி கொண்டிருகின்றது இந்தியா
இதே பாஜக அரசு இல்லாமல் இன்னொரு அரசு அதுவும் கூட்டணி குழப்பங்களில் நிரம்பிய அரசு ஒன்று இந்த கொடுமையான நேரம் அமைந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமா?.

கொரோனா மருந்துக்காக வெளிநாட்டிடம் கையேந்தி நிற்போம், இந்தியரை சுரண்டி சம்பாதித்தே வழக்கபட்ட வெள்ளைகோஷ்டி பல மில்லியன் டாலரை சுரண்டி கொண்டு மருந்தை கொடுக்கும் தனியார் மருத்துவமனைகள் கோடிகோடியாக சம்பாதிக்கும் எட்டா விலையில் தங்கத்துக்கு நிகராக அம்மருந்து விற்கபடும்
உச்சமாக “கொரோனா ஊழல்” என்றொரு மாபெரும் ஊழல்வெடிக்கும் அந்த வழக்கு பல தலைமுறைக்கு நீடிக்கும்.

இதை எல்லாம் தனிபெரும் கட்சியாகவந்த மோடி அரசு, தேசபணியில் ஊழல் எனும் பேச்சிக்கே இல்லாமல் தேசபற்று மக்கள்பணி என ஒன்றையே பிராதனமாக கொண்டு செயல்படும் மோடி அரசு தடுத்து. மக்களையும் அவர்கள் நலத்தையும் நாட்டையும் நாட்டு பணத்தையும் மீட்டிருகின்றது.இதில் அம்பானி அதானி என யாரும் வரவுமில்லை வரவும் முடியாது.2019 நவம்பரிலே முந்திகொண்டு இந்தியா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு 2021 முதல்வாரத்தில் வெற்றிபெற்று இப்பொழுது மக்களுக்கும் தர தொடங்கிவிட்டது.

உலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி, ஏதோ ஒருசக்தி அவரை இரண்டாம் முறையாக அமர்த்தி பெரும்காவலை தேசத்துக்கு கொடுத்திருக்கின்றது.பீகார் தேர்தலில் நிர்மலா சீத்தாராமன் சொன்னார்  “மருந்து தயாரானவுடன் மக்களுக்கு இலவசமாக தரப்படும்” என்றார். அதை ஆளாளுக்கு கேலி பேசினார்கள்.இதோ மருந்து தயாராகி மக்கள் பயன் பாட்டுக்கும் வந்தாயிற்று, கேலி பேசியவன் எவனையும் காணவில்லை, முகத்தையே காட்டமாட்டான்
அன்று தேசமக்கள் ஏற்றிய விளக்கின் மொத்த ஆன்ம பலம் இப்பொழுது மாபெரும் விடிவாய் வந்து விட்டது,

உலகம் இந்தியாவினை ஏக்கமாய் நோக்குகின்றது. இந்தமருந்து அம்பானி அதானி டாட்டா என எந்தகனரக தொழிற்சாலையிலும் தயாரிக்கபடவில்லை மாறாக மேக் இன் இந்தியா எனும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கபட்டிருக்கின்றது.
ஆம் எல்லா துறை பொருட்களையும் இந்தியாவில்வந்து இந்திய அரசின் அனுமதியுடன் தயாரிக்க மோடி கொடுத்ததிட்டமே இந்த மருந்து துறையிலும் இந்த அதி உன்னதமான் உலகம் வியக்கும் வெற்றியினை கொடுத்திருக்கின்றது.

பின் தங்கிய தேசம் என்றும் எக்காலமும் ஐரோப்பாவினை நம்பியிருக்க வேண்டிய தேசம் எனும் பிம்பத்தை இந்தியா சுக்குநூறாக உடைத்து தள்ளியிருக்கின்றது
மாபெரும் சாதனை செய்துவிட்டாலும் இது விஞ்ஞானிகளுக்கான வெற்றி என சொல்லி தன்கடமையினை கொஞ்சமும் கர்வமில்லாமல் தொடர்கின்றார் மோடி.

ஆம், தவம்போல் தொடர்கின்றார் அந்த தவமுனி, அந்த பெருமகன் இருக்கும் வரை இந்தியாவுக்கு இனி எந்தபேராபத்தும் வரபோவதில்லை.தொடரட்டும் அவரின் தவகோலம், செழிக்கட்டும் தேசம், தேசம்பெருமை கொள்ளும் இத்தருணம், உலகரங்கில் தன் குடிகளை காத்து இந்தியா மகா பெரிய இடத்தில் நிற்கும் இந்த தருணம் பாரதியின் வரிகளால் அந்த பெருமகனை போற்றுவதே சரியானதாகும், அது ஒன்றே மிகசரியான வரிகள், அதை இந்த பொன் மகனுக்காகவே பாடிவைத்தான் நெல்லை பாரதி.

“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்
மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ‍ கண்ணன்”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...