தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு

”தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,” என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை வலுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ் கடவுள்வேறு, ஹிந்து கடவுள் வேறு கிடையாது; எல்லாம் ஒரே கடவுள்தான். நான் கர்நாடகாவில் இருந்து வருகிறேன். முருகக் கடவுளை வழிபடுகிறேன்; அவர் உலகக்கடவுள். கடந்த, 1965ல் ஹிந்தியை திணித்தது யார்;  அப்போது, ஆட்சியில் இருந்தது யார் என, திமுக.,வினரிடம் கேளுங்கள். ஹிந்தி எதிர்ப்புபோராட்டம் காரணமாக, காங்கிரசை, திமுக., தோற்கடித்தது. பின், 2011ல் ஜல்லிக்கட்டை தடைசெய்தது யார்; அப்போது ஆட்சியிலிருந்த, தி.மு.க., – காங்., கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல்செய்தது.

அவர்கள்தான் தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தனர்; பா.ஜ., அல்ல. திருக்குறள், பாரதியார், மாமல்லபுரம், கம்பராமாயணம் குறித்தும், தமிழ்கலாசாரம் குறித்தும், பிரதமர் அதிகம் பேசி வருகிறார். தேசிய கல்வி கொள்கை, 22 மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யார் எந்தமொழியையும் படிக்கலாம் என்கிறோம். இந்த வசதியை பா.ஜ., மட்டுமே கொடுத்துள்ளது.

தென் மாநிலங்களில், தமிழகம் அதிகநிதியை, திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில், 11 மருத்துவ கல்லுாரிகளை, ஓராண்டில் பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு நான்குமருத்துவ கல்லுாரிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...