புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்

புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைவலிமையாக கட்டமைப்பதில் அக்கொள்கை முக்கியபங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விகொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்தஆண்டு உருவாக்கியது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்தியாவை சர்வதேச அறிவுசார்வல்லரசாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.புதிய தேசிய கல்விகொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந் துள்ளது. இதையொட்டி, நேற்று பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். இதில், மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான், சில மாநிலங்களின் முதல்மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் புதிய தேசிய கல்விகொள்கையை களத்தில் அமல்படுத்த கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.இளம் தலைமுறையினருக்கு என்னமாதிரியான கல்வி அளிக்கிறோம் என்பதை பொறுத்துத் தான் எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்தை எட்டுவோம் என்பது இருக்கிறது. இந்தநாடு முற்றிலும் இளைஞர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் சாதகமாக இருக்கிறது என்பதற்கு புதிய கல்விகொள்கை உத்தரவாதம் அளிக்கிறது.நாட்டை வலிமையாக கட்டமைக்கும் மாபெரும் பணியில் புதிய கல்விகொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட செயற்கைநுண்ணறிவு திட்டம், இளைஞர்களை எதிர்கால சவால்களை சந்திக்க உகந்தவர்களாக மாற்றும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப் படும் பொருளாதாரத்துக்கு பாதையை திறந்துவிடும்.புதிய தேசியகல்வி கொள்கை, தாய் மொழிக்கும், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 8 மாநிலங்களில் உள்ள 14 என்ஜினீயரிங் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் என்ஜினீயரிங் கல்வியை கற்றுத்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்பேசினார்.

One response to “புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...