ராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு

‘கடந்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிமதிப்பு, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த, ‘ஏரோ இந்தியா – 2021’ கண்காட்சியில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கேற்றகூட்டம் நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:ராணுவம் மற்றும் விண்வெளி துறைகளில், தன்னிறைவு பெறவும், புதியதொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை புகுத்தும் நோக்கில், ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டம், 2018ல் துவக்கப்பட்டது.வேலை வாய்ப்புகள்இதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், தனிப்பட்ட சிந்தனையாளர்கள், ஆராய்ச்சிமேம்பாட்டு நிறுவனங்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.

‛மத்திய அரசின் நிதியுதவி பெற்று துவங்கப்பட்ட, 384 ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள், 4,500 கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவந்துள்ளன. இவர்கள் வாயிலாக, 4.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.’ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ் துவக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், மிககுறைவாக உள்ளன. அதை, உயர்த்தி தர முயற்சிக்கும்படி, ராணுவ செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன். நம் நாட்டு பொருளாதாரத்தில், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக விரைவில் முக்கியபங்காற்ற உள்ளது என்றால், அது மிகையாகாது’.

‛இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில், ராணுவதளவாடங்கள் தயாரிப்பில், நாம் தற்சார்புடன் திகழ்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.ரூ. 203 கோடிவிண்வெளிதுறையில் மட்டும், ‘ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ், 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதில், 10 நிறுவனங்களின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகள், ஏரோ இந்தியா கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கேற்றுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், 45 நிறுவனங்களுக்கு, 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.கடந்த, 2015- – 2020 வரையிலான ஐந்தாண்டுகளில், ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி, 2,000 கோடி ரூபாயிலிருந்து, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’. இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...