நாளை(பிப்.21) நடைபெறவுள்ள பாஜக மாநிலமாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.
தமிழக பாஜகவின் இளைஞரணி மாநிலமாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் போலீஸ்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சட்டமன்றப் பேரவையின் கட்டிடவடிவில் பிரம்மாண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சுமார் 60 ஏக்கர்பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை வரவேற்க மாநாடு திடலின் இருபுறமும் பிரமாண்டபேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு சாலையோரங்களில் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |