யோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை இல்லை

யோகி ஆட்சிக்காலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று உத்தரப் பிரதேசத்தைச்சேர்ந்த பாஜக அமைச்சர் மகேந்திர சிங் தேரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 24-ம் தேதி) நடைபெற்றகூட்டத்தில் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான அஜய் குமார்லல்லு கலந்துகொண்டார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ”பந்தேல்கண்ட் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் சரியாக இல்லாததால் விவசாயிகளின் தற்கொலை அதிகளவில் உள்ளது. ஏன், நேற்றுகூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ஜல் சக்தி அமைச்சர் மகேந்திரசிங், ”தலைவர்கள் என்று அழைக்கப்படும் நீங்கள்தான் ஏராளமான பொய்களைச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சத் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...