அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலைகட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், ராமர்கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி, கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி துவங்கியது. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர், நாடுமுழுவதும் நன்கொடை வசூல்செய்யும் பணி கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி 45 நாட்களாக நடைபெற்றுவந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில்சென்று நிதி வசூல் செய்துள்ளனர். ஜனாதிபதி முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதிவழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.