திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டது

திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருப்பதாக பாஜக., மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங் குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், இன்று (மார்ச் 14) தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முருகன் பேசியதாவது: பா.ஜ.,வில் தினந்தோறும் பிரபலங்கள்இணைவது எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. தேர்தலுக்காக எங்களது பிரசாரவாகனங்கள் இன்று முதல் துவங்குகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டு, கொள்ளையடிப்பதில் கவனம்செலுத்துகின்றனர். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், நிலத்தை அபகரிக்கதான் செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தால், கட்டபஞ்சாயத்து, ஊழல், நிலஅபகரிப்பு தலைவிரித்து ஆடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வில் இணைந்த சரவணன் பேசுகையில், ‛பிரதமர் மோடியின் கொள்கைகளை எடுத்துசெல்வதில் நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். சுமார் 3 மாதங்களாக பா.ஜ.,வில் சேருவது தொடர்பாக பேச்சு நடத்திவந்தேன். திமுக.,வில் எம்எல்ஏ.,வாக இருந்ததால்தான் விருப்பமனு தாக்கல் செய்தேன். திமுக.,வில் வேட்பாளராக வாய்ப்பு அளித்திருந்தாலும், நான் பா.ஜ.,வில் சேர்ந்திருப்பேன்.’ என்றார்.

One response to “திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...