குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி உறுதியளித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றதொகுதி பாஜக வேட்பாளராக மூத்த பாஜக உறுப்பினர் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவரை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது, என்னை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தேசிய மாநில, மாவட்டத் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துதேர்தலை சந்திக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். நானும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெறுவேன்.
குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரியும், அரசு நர்சிங் கல்லூரியும் இல்லை என்ற குறை உள்ளது. இந்த குறையை போக்கி அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சிப்பேன். நாகர்கோவிலில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தைபோக்க புதிய திட்டங்களை உருவாக்கி தொகுதி மக்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |