மேற்குவங்கம் வெற்றியை நெருங்கும் பாஜக

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி எல்லாமுமாக நம்பி இருந்த ஒருகுடும்பம்.. மொத்தமாக பாஜக பக்கம் தாவபோகிறது. மம்தாவின் இடது கை என்று கருதப்பட்ட பவர்புல்குடும்பம் திரிணாமுலை கலங்க வைத்து இருப்பதுதான் மேற்குவங்கத்தில் இப்போது டாப் நியூஸ்!

மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல். பாஜகவிற்கோ .. இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது மேற்குவங்கம் நமக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  என்று களமிறங்கும் தேர்தல்.

கருத்து கணிப்புகள் எல்லாம் மம்தாதான் மீண்டும் முதல்வர் என்று கூறினாலும்.. பாஜக எப்போது வேண்டுமானாலும் ஷாக்கொடுக்கும் என்று களநிலவரம் சொல்கிறது. இதனால் மம்தாவும் மிகவும் கவனமாக காய்நகர்த்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் மம்தாவை ஒரு அரசியல்குடும்பம் அங்கு ஆட்டிப்படைத்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் இருக்கும் அதிகாரிகுடும்பம் என்பது அதிக சக்திகொண்ட அரசியல் குடும்பம் ஆகும். திரிணாமுல் காங்கிரசை உருவாக்கியதில் முக்கியபங்கு வகித்த குடும்பம்தான் அதிகாரி குடும்பம். அப்பா சிசிர் அதிகாரி, அவரின்மகன் சுவேண்டு அதிகாரி, இன்னொரு மகன் தீப்யாந்து அதிகாரி மற்றும் சவ்மெண்டு அதிகாரி என்று நான்கு அதிகாரிகளும் திரிணாமுல் காங்கிரசில் அதிகபலம் வாய்ந்தவர்கள்.

இதில் சுவேண்டுதான் மம்தாவின் இடதுகைபோல செயல்பட்டு வந்தார். திரிணாமுல் அமைச்சராக இருந்த இவர் மம்தாவின் மாஸ்டர் மைண்ட் போல செயல்பட்டுவந்தார். ஆனால் திடீர் திருப்பமாக கடந்த டிசம்பர் மாதம் பாஜகவின் கூட்டத்தில் கலந்துகொண்டவர், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஆம் மம்தா அதிகம் நம்பிய சுவேண்டு அதிகாரி பாஜகவில் இணைந்தார்.. இதுவே திரிணாமுல் காங்கிரசை உடைத்துபோட்டது.

கூடுதல் ஷாக்காக மம்தா போட்டியிடும் அதேதொகுதியில் சுவேண்டு அதிகாரி களமிறங்கி உள்ளார். மம்தாவை அவரின் சொந்ததொகுதியான நந்திகிராம் தொகுதியிலேயே பாஜக சார்பாக களமிறங்கி சுவேண்டு எதிர்கொள்கிறார். இதுவரை நடந்ததை எல்லாம் மம்தா பொறுத்துக் கொண்டார்.. ஆனால் இதற்குபின் நடந்த சில திருப்பங்கள்தான் மொத்தமாக மம்தாவை முடக்கி உள்ளது.

சுவேண்டு பாஜகவில் இணைந்து சிலநிமிடங்களில் அவரின் தம்பி சவ்மெண்டு அதிகாரியும் பாஜகவில் சேர்ந்தார். ஒரேகுடும்பத்தில் ரெண்டு விக்கெட் காலியான நிலையில் மீதம் உள்ள இரண்டு விக்கெட்டும் இன்று காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் கட்சியின் மூத்த உறுப்பினர், அதிகாரி குடும்பத்தின் தலைவர் சிசிர் அதிகாரி இன்று பாஜகவின் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

தற்போது திரிணாமுல் எம்பியாக இருக்கும் இவர் பாஜக இன்று நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதனால் இவரும் இன்று பாஜகவில் சேர்வார் என்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசின் மிகமுக்கியமான தலைவர் ஆவார் இவர். இன்னொரு பக்கம் அதிகாரி குடும்பத்தின் இன்னொரு திரிணாமுல் எம்பி தீப்யாந்து அதிகாரியும் பாஜக கூட்டத்திற்கு செல்கிறார்.

இதற்காக பாஜக தலைவர்களை நேற்றே அதிகாரிகுடும்பம் சந்தித்தது. சுவேண்டு அதிகாரி என்ற ஒருதூண்டிலை வைத்து அவரின் அப்பா திமிங்கலம் தொடங்கி மொத்த அதிகாரி குடும்பத்தையும் பாஜக கொக்கிபோட்டு தூக்கி உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் இவர்களுக்கு ஆதரவாக நிறைய எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அவர்களும் மொத்தமாக பாஜகவிற்கு தாவபோகிறார்கள் என்கிறார்கள்.

கடந்த டிசம்பரில் டஜன் கணக்கில் பாஜகவில் திரிணாமுல் கட்சியினர் இணைந்தனர். தற்போது மொத்தஅதிகாரி குடும்பமும் மம்தாவிற்கு டாட்டா காட்ட போகிறது. இதில் சுவேண்டு அதிகாரியை முதல்வராக முன்னிறுத்த பாஜக பிளான் போட்டுவருகிறதாம். பாஜகவின் மேற்கு வங்க முகமாக இந்த அதிகாரி குடும்பம் மாற போவதாக தகவல்கள் வருகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...