ஒடிசா முன்னாள்முதல்வர் எழுதிய ‘ஒடிசா இதிகாசம்’ என்ற நூலின் இந்தி மொழிபெயர்ப்பு பதிப்பை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘உத்கல்கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1946 முதல்1950 வரை மற்றும் 1956 முதல் 1961வரையில் ஒடிசா முதல்வராக பதவிவகித்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் ஆவார்.இவர் எழுதிய ஒடிசா இதிகாசம் என்ற நூல் இது வரை, ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்துவந்தது. இந்நிலையில் இதன் இந்திமொழி பதிப்பை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிஜு ஜனதாதளம் எம்.பி.யும் ஹரேகிருஷ்ணாவின் மகனுமான பர்த்ருஹரி மஹதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
சுதந்திரப் போராட்டத்தில் முக்கியபங்கு வகித்ததற்காகவும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காகவும் ஹரே கிருஷ்ணா மக்களால் என்றென்றும் நினைவுகூரப் படுகிறார். மாநில கலாச்சாரத்தை வளர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஹரே கிருஷ்ணாவின் 120-வது பிறந்த நாளை கொண்டாடினோம். இன்று அவர் எழுதிய புகழ்பெற்ற நூலின் இந்திமொழி பதிப்பை வெளியிடுகிறோம். ஒடிசாவின் வரலாறுபற்றி நாட்டுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.எனவேதான் அவரது நூல் இந்தியில் வெளியிடப்படுகிறது.
இப்போது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம். அப்போது தான் அதைப்பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், உணரவும் முடியும். மேலும் புதிய நம்பிக்கையுடன், ஏதாவது செய்யவேண்டும் என்ற புதிய தீர்மானங்களை நோக்கி இளைஞர்கள் முன்னேறிச் செல்லவும் உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |