மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவுள்ளது என்றும் அக்கட்சியே வெற்றிபெறும் எனவும் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துவரும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பாஜக.,வினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல்வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்பு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சிலஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது.

உண்மையில், மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப்போகிறது. ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கத்தில் பாஜகதான் வெற்றிபெறும் என பேசியதாக மூத்த தலைவர் அமித்மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியவிவரம் வருமாறு:

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும்அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில்கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்ததேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நரேந்திரமோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகியவை முக்கியமானவை.

மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்துவருகிறது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் இந்திபேசுவோர் ஒருகோடி எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

மதுவாஸ் சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கும் சூழல்உள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள்கூட 10 – 15% பேர் பாஜக தான் ஆட்சி அமைக்ககும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். 50 – 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. பெரும்பான்மையான கருத்து பாஜக தான் ஆட்சிஅமைக்கும் என்பதாக உள்ளது.

இவ்வாறு பிரசாந்த்கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...