கரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்

தடுப்பூசி திருவிழாமூலம் இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப் பெரிய போா் தொடங்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளா்களில் தொடங்கி முன்களப் பணியாளா்களான தூய்மை பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்டோா் என இந்தத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை அதிகமான நபா்களிடம் கொண்டுசோ்ப்பதற்காக, ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாள்களுக்கு ‘தடுப்பூசி திருவிழா’ நடைபெறும் என்று பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அந்ததிருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை அடுத்து, நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோள்களை அவா் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, சமூக வலைதள பக்கத்தில் அவா்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவலைதடுக்க வேண்டுமெனில் தனிநபா் தூய்மையும், சமூகத்தூய்மையும் அவசியம். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒருவராவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவவும். அதாவது, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அருகில் உள்ள முகாமுக்கு செல்ல முடியாத முதியவா்களுக்கும், அதிகம் படிக்காதவா்களுக்கும் தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி, அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவவேண்டும்.

அடுத்ததாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைபெறும் வழிமுறைகளை எடுத்துரைத்து அவா்களுக்கு உதவவேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்; உங்களுக்கு அருகில் இருப்பவா்களையும் கரோனோவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் யாரேனும் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்தக் குடியிருப்பை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில், கரோனா பரவலைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும். ஓரிடத்தில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால்கூட எஞ்சியிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறியளவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்குவது, தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை நிறுத்திக்கொள்வது, தகுதியானவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது, கரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள்வது ஆகியவற்றைப் பொருத்து கரோனாவுக்கு எதிரான நமதுபோராட்டத்தில் வெற்றிமுடிவு செய்யப்படும்.

எனவே, தகுதியுடைய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஏப்ரல் 11-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதிவரை அதிகபட்ச அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசிகூட வீணாகிவிடக் கூடாது என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

மக்களின் பங்கேற்பு, விழிப்புணா்வு, அனைவரின் பொறுப்புணா்வு ஆகியவற்றின்மூலம் கரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...