கரோனாவுக்கு எதிரானபோர் ஓயவில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அதில், நாட்டுமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்னையால் நாடே பெருமைகொள்கிறது.
கரோனாவுக்கு எதிரானபோர் ஓயவில்லை, 2ஆம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பால் கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டுமக்கள் முன்வர வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு அவதால் இந்தஆண்டு சுதந்திரதினம் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள பலதிட்டங்களில் ககன்யான் திட்டம் முக்கியமானது. எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறிவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |