மேற்குவங்கம் மாற்றம் காணும் பிரச்சாரங்கள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்கள் 8 கட்டங்களாக நடந்துவருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதன காரணமாக, மேற்குவங்க தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம்செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்துசெய்தார். மற்ற தலைவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தங்கள் தேர்தல்பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இடதுசாரி கட்சித் தலைவர்களும் அறிவித்தனர். மேற்குவங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், தனது பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு பதிலாக சிறியளவிலான கூட்டங்களை நடத்தப்போவதாக அக்கட்சி தலைவர், முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

இதை அடுத்து பாஜகவும் தேர்தல்பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை, பிரம்மாணடமான அளவில் இல்லாமல், சிறியளவில், அதாவது சுமார் 500 முதல் 1000 பேருக்கு அதிகமான அளவில் இல்லாமல் மக்கள்கூடும் வகையில் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதமர் மோடி (PM Narendra Modi) , உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டங்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதனிடையே, மேற்குவங்கத்தில் மீதமுள்ள மூன்றுகட்ட வாக்குபதிவினை, ஒரேநாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தாபேனர்ஜீ விடுத்த கோரிக்கை பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அது சாத்திய மில்லை என கூறியுள்ளது.

நேற்று கொரோனாபரவல் தொடர்பாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது கடமைகளை சரியாகசெய்து, தடுப்பூசி செயல்முறையை வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கொரோனா தொற்றுபரவலை தடுக்கவும், தொற்றுக்கு எதிரான போரில் வெற்றிபெறவும் அனைவரின் உதவியும் நாட்டுக்குத் தேவை” என குறிப்பிட்டார்.

மேலும், “சென்ற ஆண்டு நமக்கு இந்ததொற்று புதியதாக இருந்தது. அப்போது நம்மிடம் இதை எதிர்த்துபோராட் ஒரு ஆயுதமும் இல்லை. இப்போது, நம்மிடம் இதற்கான மருந்துள்ளது, தடுப்பூசிகள் உள்ளன, வழிமுறைகள் உள்ளன. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.