கோவை தெற்குதொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தம்பி கொரோனா தொற்றால் உயிரிழந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்குதொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக சார்பில் வானதிசீனிவாசன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், கமலுக்கும், வானதி சீனி வாசனுக்கும் கடும்போட்டி நிலவியது. இறுதியில் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஒருபக்கம் வானதி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்துகொண்ட மகிழ்ச்சியாக தருணத்தில் மறுபக்கம் துக்கசெய்தியும் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக வானதிசீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என் தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர்கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராததுக்கமாக மாறினான். ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார். வானதி சீனிவாசனின் தம்பி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |