2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்

2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவரும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக வானதி சீனிவாசனின் மக்கள்சேவை மையம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டுவயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் தொடக்கவிழா நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியமகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன் இலவசபசும்பால் வழங்கும் அமுதம் திட்டத்தை துவக்கி வைத்து தாய்மார்களுக்கு பசும்பால் வழங்கினார். மேலும் பாஜக சார்பில் பெண்களுக்கான இலவச நாப்கின்வழங்கும் இதம் திட்டத்தையும் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில்பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவரும் எனவும், அதற்கான முதல்விதை கோவை தெற்குத் தொகுதியில் போடப் பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் கோவை பாஜகவின் இரும்புக் கோட்டையாகமாறும் என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு சார்பில் பெண்கள் தேவைசார்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு சேவை செய்யவேண்டும் எனவும் கூறினார். சேவைக்கு பிரதமர் எங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார் என்றும், கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏக்களை உருவாக்க அனைவரும் உதவிடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...