மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் போடப்பட்ட மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 42, 79,210 அமர்வுகள் மூலம், 32,17,60,077 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 64,25,893 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

புதிய கொவிட்-19 தடுப்பூசிதிட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிக்கவும், அளவை விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 50,040 பேருக்கு புதிதாகதொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 20 நாட்களாக, தினசரிகொவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. விட் பாதிப்பு, தொடர்ந்து குறைந்துவருகிறது. நாட்டில் தற்போது கொவிட்சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 5,86,403 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 9,162 பேர் குறைந்துள்ளனர்.

தற்போது கொவிட்சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1.94 சதவீதம்.

தொடர்ந்து 45 நாட்களாக, நாட்டில் தினசரி குணமடைப வர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், தினசரி கொவிட் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 8 ஆயிரம் பேர் (7,904) குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 2,92,51,029 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், 57,944 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்தசதவீதம் 96.75 சதவீதம்.

நாடு முழுவதும், கொவிட் பரிசோதனை, கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 17,77,309 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில், இது வரை மொத்தம் 40.42 கோடி (40,42,65,101) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாடுமுழுவதும் கொவிட் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வாராந்திர கொவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. வாராந்திர கொவிட் பாதிப்பு, தற்போது, 2.91 சதவீதமாக உள்ளது. தினசரி கொவிட்பாதிப்பு இன்று 2.82 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக தினசரி கொவிட்பாதிப்பு 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

One response to “மொத்ததடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்தது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...