ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல என பிரதமர்மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன்நடந்தது. 29 தங்கம், 31 வெள்ளி, 51வெண்கலம் என 111 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்றுசாதனை படைத்தது. இந்நிலையில், டில்லி மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் ஆசிய பாரா விளையாட்டில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: உங்களை (விளையாட்டு வீரர்கள்) சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு தொடர்ந்து கிடைத்துவருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் வெற்றியால் பெருமிதம் கொள்கிறார்கள். ஆசியபாரா விளையாட்டில் இந்தியா பெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |