உங்களுக்கு 50 நாள்தான் கெடு ஸ்டாலினுக்கு பாஜக அண்ணாமலை கெடு!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப் பேற்றதில் இருந்து, அவரது தலைமையில் பல்வேறு போராட்டங்களை பாஜக முன்னெடுத்துவருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதைபோன்று, மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்திவழங்க வேண்டும் என வலியுறுத்தி, அண்ணாமலை தலைமையில் சென்னை நுங்கம் பாக்கத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேகதாது அணைவிவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக பாஜகசார்பில் தஞ்சாவூரில் (ஆகஸ்ட் 5) போராட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடு ஆகியவை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு 50 நாட்கள் கெடுகொடுத்து அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய 1400 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவேண்டும். 50 நாட்களில் நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...