கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத கொரோனா பாதிப்புகளும், 84 சதவீத உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பரவல் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலை அளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இரண்டாவது அலைக்கு முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இதேநிலை இருந்ததால், மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
கொரோனா பரவல் எண்ணிக்கை நீண்டகாலத்துக்கு அதிகரித்து இருந்தால், கொரோனா உருமாற்றம் பெறவும், புதிய வகை வைரஸ்கள் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் முடிந்துவிடவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுக்குப் பிந்தைய நிலவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |