வறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்னிகுக் நினைவகம் தான் கிடைத்ததா?

தென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்.

அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக்.

தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை நத்தம் சாலையில் அன்னாரின் நினைவாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டி பொறியாளர் பென்னி குக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியாகத்தின் திரு உள்ளமாக திகழ்ந்த பென்னி குக் நினைவு மண்டபத்திலே…. கலைஞரின் பெயரால் ஒரு நூல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு தென்மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களையும், பொதுமக்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிறப்பு செய்ய நினைக்கும் திமுக அரசு அவரின் பெயரில் நூல் நிலையம் அமைக்க வேறு எந்த கட்டிடமும் கிடைக்கவில்லையா…. என்று அரசின் இம் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

நதி நீர் தேக்கி வைத்து நாட்டுமக்கள் தாகத்தை தீர்த்த தியாகத்தை செய்த பென்னி குக்கின் நினைவு மண்டபத்தில் இந்த நூல் நிலையம் அமைய வேண்டுமா என்று மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

தாங்கள் குலசாமியாக வழிபடும், தெய்வத்தின் சந்நிதியில் நூலகம் எதற்காக என்றும்….

புத்தகங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள் தான் ஆனால் அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட்ட வேண்டுமா? என்றும் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகிறார்கள்.

கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதைத் தான் கலைஞரின் ஆன்மாவும் விரும்பும். ஆகவே, மக்களின் எணணங்களுக்கும் மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி அண்ணாமலை 

பாஜக மாநில தலைவர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...