ஆதிக்க சாதி, அடிமை சாதி என்பதெல்லாம் இப்போது கிடையாது

விகடன் பத்திரிக்கையில் குதர்க்கமான கேள்விகளுக்கு நம்ம எம்எல்ஏ எம்ஆர் காந்தி அண்ணாச்சி சாதுர்யமான பதில்கள்..

‘காலில் செருப்புகூட அணியாமல் வலம் வருகிறீர்களே… என்ன காரணம்?’’

‘‘என் தாய்மண் மீது எனக்கு மிகப்பெரிய பற்று உண்டு. அந்த வகையில், தாய் மண்ணோடு எப்போதும் எனக்குத் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே செருப்பு அணியாமல், வெறும் காலுடன் நடக்கிறேன். இதைத் தவிர வேறு பெரிய காரணமெல்லாம் ஒன்றுமில்லை.’’

‘‘தமிழகத்தில் இன்றும் சில இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்ற அவலநிலை தொடர்கிறதுதானே?’’

‘‘இது வியப்புக்குரிய செய்தி. ஆதிக்க சாதி, அடிமை சாதி என்பதெல்லாம் இப்போது கிடையாது. அது காலம் கடந்த ஒன்று. இன்றைய சூழலில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பவனே ஆதிக்கம் செலுத்துகிறான். ஒரே சாதியில், சொந்தக்காரர்களாக அல்லது அண்ணன், தம்பியாக இருப்பவர்களேகூட, பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவரைத் தன் வீட்டுக்குள் அழைக்கத் தயாராக இல்லை.’’

‘‘மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடகா பா.ஜ.க., தமிழக பா.ஜ.க., மத்திய பா.ஜ.க அரசு மூன்றும் நாடகமாடுவதாக விமர்சனம் எழுந்துள்ளதே?’’

‘‘நாடகம் இல்லை… கர்நாடகா மண்ணுக்குத் தேவையானதை அவர்கள் கேட்கிறார்கள். நம் மண்ணுக்குத் தேவையானதை நாம் கேட்கிறோம். மத்திய அரசு, இந்த இரண்டு மாநிலங்களையும் அரவணைத்து, யாருக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து முடிவெடுக்க வேண்டும்.’’

‘‘காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவிடமிருந்து தன் உரிமையை முழுமையாக மீட்டெடுப்பதில், தமிழ்நாடு தொடர்ந்து தோல்வியைத்தானே சந்தித்துவருகிறது?’’

‘‘கர்நாடகா வெற்றிபெற்றுவிட்டது, தமிழ்நாடு தோற்றுவிட்டது என்றெல்லாம் எதுவும் கிடையாது. எல்லோருமே இந்தியாவுக்குள்ளேதான் இருக்கிறோம். எல்லோருமே இந்தியர்கள்தான். எங்கள் ஊரின் பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குத் தண்ணீரைக் கொண்டுபோகக் கூடாது என்று கன்னியாகுமரி மக்களே போராடினார்கள். வேறு வழியில்லாமல், கடல்நீரையே சுத்திகரித்துப் பயன்படுத்திக்கொண்டது அணுமின் நிலையம். இது போன்ற பிரச்னைகள் ஆங்காங்கே அவரவர் தேவைக்கு ஏற்றபடி தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. சட்டப் போராட்டம் நடத்தித்தான் நாம் நம் உரிமையைப் பெற வேண்டும்.’’

சட்டப் போராட்டம் நடத்தித்தான் உரிமையைப் பெற வேண்டுமென்றால், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டுக்குச் சாதகமான முடிவை அறிவிக்காது என்று சொல்லவருகிறீர்களா?’’

‘‘இல்லையில்லை… மத்திய அரசு மிகத்தெளிவாக இருக்கிறது. எந்தெந்த மாநிலத்துக்கு என்னென்ன தேவையோ அதை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் மத்திய அரசு பிரித்துக்கொடுக்கும். யாரும் எதையும் இழந்துவிடப்போவதில்லை.’’

‘‘ஆனால், ‘தமிழக பா.ஜ.க தலைவர் உண்ணும் விரதம் இருந்தால்கூட அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை’ என்கிறாரே பா.ஜ.க-வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர்?’’

(பலமாகச் சிரிக்கிறார்) ‘‘அவர் அப்படித்தானே சொல்ல முடியும்… ஆனால், மத்திய பா.ஜ.க அரசு அப்படியெல்லாம் தமிழகத்தின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாது. நிச்சயம் நல்லதே நடக்கும்.’’

‘‘பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?”

‘‘அவரது பேச்சு அநாகரிகமானது. எனவேதான், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைதுசெய்தது. ‘கிறிஸ்தவர்களாகிய நாங்கள் 62 சதவிகிதம் ஆகிவிட்டோம். நீங்களெல்லாம் எங்களுக்குப் பின்னால்தான் இருக்கிறீர்கள்’ என்றெல்லாம் இந்துக்களை எச்சரிக்கிற தொனியில், ஜார்ஜ் பொன்னையா பேசியதே முதலில் தவறு. ஆனால், பேசிவிட்டார். அப்படியென்றால், முறையாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்;

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...