அன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது

முழுமுதற் கடவுளாம் , ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த வருடம் வருகின்ற (செப்டம்பர் 10) வெள்ளி கிழமையன்று விநாயகர் சதுர்த்திவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகரே.

1893-ம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒரு சேர மக்களிடையே எழுச்சியுற செய்ய தொடங்கப்பட்ட முறையே மக்களால் இன்றுவரை மிகப்பெரிய விழாவாக கொண்டாடபடுகிறது.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

ஆனால் இன்று ஒரு பக்கம் ஒரு கூட்டம் தவம் இருக்கிறது   ஜெபம் செய்கிறது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறைவான எண்ணிக்கையில் நடைபெற வேண்டும்  என்று

மறுபக்கம் தமிழக அரசே  பொதுவெளியில் விநாயகர் வழிபாடு கூடாது என்றும் அவரவர் வீடுகளிலேயே வழிபட்டு கொள்ளலாம் என்றும்,  இல்லாவிட்டால்  கொரோன நோய் பரவும் என்றும், இது மத்திய அரசின்  உத்தரவும் கூட என்றும் கூறி இந்துக்களின் ஒற்றுமை  திருநாளை சீர்கலைக்கும் விதமான சதி வலைகளை பின்னியுள்ளது.

மத்திய அரசு நோய்க் கட்டுப்பாடு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கூறியதே தவிர  விழாவை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கூறவில்லை இதைப் பின்பற்றி தான் பாண்டிச்சேரி கர்நாடகம் தெலுங்கானா மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் கடும் கட்டுப் பாடுகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன

மத்திய அரசின்  புதிய விவசாய சட்டத்தையோ, நீட் தேர்வையோ, புதிய கல்வி கொள்கைகளையோ, குடியுரிமை சட்டத்தையோ என்று மத்திய அரசின்  அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும், சிறிது கூட ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் திமுக அரசு, இப்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம் என்று மக்கள் நல வேஷம் கட்டியுள்ளது.

இது பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததன் வெளிப்பாடே, சுதந்திரத்துக்கு முன்பாக 1980 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பல சறுக்கல்களை, நெருக்கடிகளை சந்தித்த அன்றைய ஆங்கிலேயே அரசு  மக்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 20க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை விதித்தது. அன்றைக்கு அடிபணிய  மறுத்த, கடுமையாக எதிர்த்த முஸ்லீம் லீக் தங்கள் ஒற்றுமையின் அடையாளமாக மசூதியில் கூடும் அனுமதியை பெற்றது, ஆனால் இந்துக்களிடம் அத்தகைய ஒற்றுமைகள் இல்லாததால்  அவர்களை ஒருங்கிணைக்க விநாயக சதுர்த்தி போன்ற விழாக்கள் தேவைப்பட்டது. பால கங்காதர திலகர் போன்றோர் அதை முன்னெடுத்தனர்.

ஆனால் இன்றுவரை விநாயகர் சதுர்த்திக்கான காரணங்கள் தொடர்வது வேடிக்கை என்றால்!, ஆங்கிலேயன் செய்ததையே இன்றைய ஆளும் திமுகவும் செய்வது அதைவிட வேடிக்கை!!

நன்றி தமிழ் தாமரை விஎம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...