அந்த குழந்தை

அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத் திருக்கலாம்.
மிகவும் சுலபமானமுடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம்மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.

அதை இந்த சமுதாயத்தின் தலைசிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப் படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப் படுத்தியிருப்பார்கள்.

குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை. அவள் தேர்ந்தெடுத்தது கடினமானபாதை. அவள் இன்னும் சிலநாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
அவள் பெற்றோருக்கு மட்டும் நினைவில் வலியாக அவள் இருக்கக்கூடும்.
அவளைக் குறித்து எந்த எழுத்தாளனும் எழுதப் போவதில்லை. அவளது முடிவு எந்த திரைப்படத்திலும் சொல்லப்பட போவதில்லை.

ஆனால் அந்த குழந்தை தனது உயிரைக் கொடுத்தாள். தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.தர்மத்தை கைவிடவில்லை.தர்மத்துக்கான பலிதானியாக அவள் என்றென்றும் தீபமாக நிற்கிறாள்.

உணர்வுடைய இந்து சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான காவல்தேவதையாக அவள் நிற்கிறாள். தர்மத்தின் காவல்தேவதையாக அவள் நிற்கிறாள்.

அவள் நினைவு என்றென்றும் ஒவ்வொரு ஹிந்துவின் நினைவிலும் இருக்க வேண்டும் அவ்வாறு அந்நினைவு நின்று ஒளி கொடுக்க அக்குழந்தை தெய்வமாகவே போற்றப்பட வேண்டும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம் எப்படி வாழவேண்டுமென்பதைக் காட்டி சனாதன தர்மம் உயிரினும் உயந்ததென்பதைக் காட்டிய அந்தகுழந்தை இன்று இந்த மண்ணின் காவல் தெய்வம்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று அவளுக்கென்று தீபம் ஏற்றுவோம். அவள் நினைவாக ஒரு தெய்வ ஆலயமும் அவள் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் ஆலயத்திலும் ஒவ்வொரு குழந்தைகள் இந்து நூலகம் எழுப்புவதும் பாரத அரசே இக்குழந்தையின் நினைவை போற்றுவதும் அவசியமான விடயங்கள்.

நன்றி அரவிந்தன் நீலகண்டன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...