இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உழைப்பாளர் தின கூட்டம் நுவரெலியா – கொட்டகலையில் இன்று இடம்பெற்றது. இந்தஉழைப்பாளர் தின கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில்தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த மே தின கூட்டத்திற்கு ஏராளமான இந்திய வம்சாவளி தமிழர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் அமோகவரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது . இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திரும்பிபார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்ட போதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.
இலங்கையை அருகிலுள்ள நாடு, எமதுசொந்தங்கள் வாழும் நாடு என இருகோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்துதேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பிவைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம்வளரும் அதே வேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளரவைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்ட காலத்துக்கானதல்ல. விரைவில் நிலைமை மாறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரதபிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.” – என்றார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |