தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் காலுன்றி உள்ள பாஜகவை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.

அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சிஅல்ல; கட்சியினர் அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதிபங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கட்சிநிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேணடும்’ என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிறப்பானசேவை குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தமிழகமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கட்சியினரை அறிவுறுத்திஉள்ளார்.

முக்கியமாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்தின் அனைத்துபகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை புதிய நிர்வாகிகள், முழுமூச்சாக மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு அதிகநபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சிவிதிப்படி பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். .ஒவ்வொரு தொண்டரும் தங்கள்பகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான அரசு உதவிகளை செய்து தக வேண்டும்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் கூட்டணிகுறித்தி தேசிய தலைமை முடிவுசெய்யும். அதேசமயம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதில் இருந்தே களப்பணிகளில் இறங்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...