2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும்

2024ல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாகவரும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

வேலுார் மாவட்டத்தில் நடக்கும், நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை வேலுாரில் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல்இல்லாத நிர்வாகம் அமைய, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். நீட்தேர்வால் அரசு பள்ளியில் படித்த 517 மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். கொரோனாவின் போது, 450 ரயில்களில் ஆக்சிஜனை எடுத்துவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில்தான் 172 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.கிருஷ்ணா- கோதாவரி- தென்பெண்ணை நதிகளை இணைக்க 85 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதால், வேலுார்மாவட்டம் பயன்பெறும்.

2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை பொருத்துத்தான் இதுஅமையும்.வேலுார் மாநகராட்சியில் 1,234 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊழலின் காரணமாக இத்திட்டம் இன்னமும் முடியவில்லை. ஊழல் இல்லாத ஆட்சிஅமைய பா.ஜ., வால் மட்டும்தான் முடியும்.

தி.மு.க., மீது மக்களுடைய கோபம் எந்தளவு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டதால் தான், நேரடியாக வராமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...