இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது

பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த வரை, மூன்றுதாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு செயல் படுகிறது. அவை சேவை, உறுதி, அர்ப்பணிப்பு ஆகும். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே, சாமானியமக்களின் நலனுக்காக உழைத்துவரும் ஒரேகட்சி பாஜக மட்டுமே. ஒரே குடும்பத்தை சுற்றிவரும் கட்சி அல்ல. அதனால்தான்,பாஜக இன்று மத்தியில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது.

பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். பொதுமக்களுக்கும், கட்சிக்கும் இடையே ஒருநம்பிக்கை பாலமாக நீங்கள் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அவர்களிடத்தில் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறப்போவது உறுதி. இதற்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கட்சியின் தேசியத் தலைவர்ஜே.பி. நட்டா கூறுகையில், “நாடுமுழுவதும் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துவருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அங்கு பாஜக விரைவில் புதியஅத்தியாயம் படைக்கும் என உறுதி அளிக்க விரும்புகிறேன்” என்றார்.

செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது, எதிர்க்கட்சிகள் பல்வேறுசந்தேகங்களை எழுப்பினர். ஆனால், இன்று 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.இதற்கு செயற்குழு பாராட்டுதெரிவித்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வட்டார, மாவட்ட வளர்ச்சிகவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அங்கு ஜனநாயக நடைமுறையில் பங்கேற்க மக்களிடம் உள்ள ஆர்வம் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது” என்றார்-

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...