தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிக்கக்கோரி போராட்டம் நடைபெறலாம்

தேர்தலின் போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லைமாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மதுபோதைக்கு அடிமையாகக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவது வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தை நினைத்தால் இன்னும் அச்சம் அதிகமாகிறது.

தமிழகத்தில் மது மற்றும் கஞ்சாவிற்பனை அதிகரிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட கஞ்சாவுக்கு அடிமையாகும் கொடுமைநடக்கிறது. அதனால் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல் துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லா விட்டால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

கஞ்சா போதை காரணமாக ஒரேமாதத்தில் ஏழு பேர் கொலையாகி இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் கமிஷன் பற்றியே முதல்வர் சிந்திக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் காண்டிராக்டர்களிடம் இருந்துமட்டும் 40,000 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றிருக்கிறார்கள்.

அ தி.மு.க-வின் முன்னாள் சபாநாயகராக இருந்த மறைந்த காளிமுத்து பேசும்போது, ’எப்போதும் ஆட்சிக்குவரும் கட்சி அ.தி.மு.க. ஆனால் எப்போதாவது ஆட்சிக்கு வரும் கட்சி தான் தி.மு.க’ என்பார். பல்வேறு காரணங்களால் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. கூட்டணி தர்மம் கருதி அதை நான் வெளியில் சொல்லமுடியாது. ஆனாலும், இரண்டு, மூன்று காரியங்களை எடப்பாடி பழனிசாமி சரி செய்திருந்தால் இன்றைக்கு அவர் முதல்வராக இருந்திருப்பார்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ’தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அவர் ஆசைப்படும்போது நாங்கள் கேட்கக் கூடாதா? அதனால் நாங்களும் தமிழ் நாட்டை ஆந்திரா போன்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கேட்போம். தலா 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் இரண்டிலும் பாரதிய ஜனதா முதலமைச்சராக வரமுடியும்.

நிர்வாக வசதிக்காக பாண்டியநாடு, பல்லவ நாடு எனப் பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதனால் மாநிலத்தை இரண்டாகப்பிரிக்க முடியும். தெலங்கானா பிரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆந்திராவில் நடைபெற்ற போராட்டம்போல, தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிக்கக்கோரி போராட்டம் நடைபெறலாம்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார். பின்னர், திமுக அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...