வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு முடிவு காட்டியுள்ளோம்

‘வட கிழக்குப் பிராந்தியத்தில் ஊழல் கலாசாரத்துக்கு பாஜகதான் முடிவுகட்டியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறினாா்.அருணாசல பிரதேச மாநிலம், நாம்சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வட கிழக்குப் பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி என்ன செய்தாா் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. கண்களை மூடிக் கொண்டிருந்தால் வளா்ச்சியை காணமுடியாது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இத்தாலிய கண்ணாடியைக் கழற்றிவிட்டு இந்திய கண்ணாடி கொண்டு பாா்க்க வேண்டும். அப்போது தான், கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யத்தவறியதும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த வளா்ச்சிப் பணிகளும் தெரியவரும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை இடைத் தரகா்கள் அபகரித்து வந்தனா். மத்தியில் பிரதமா் மோடி தலைமை யிலான அரசு கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட்டது. ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத் தன்மையுடன் செலவிடப்படுகிறது. வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை பிரதமா் மோடி உறுதி செய்துள்ளாா்.

முந்தைய அரசின் தவறான கொள்கைகளால், வட கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஓங்கியிருந்தது. பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளுடன் மத்தியஅரசு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு இந்தப்பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது. இந்தப் பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 9,600 தீவிரவாதிகள் சரணடைந்து நல்வழிக்கு திரும்பியுள்ளனா். வடகிழக்கு இளைஞா்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு புதியதொழில்களைத் தொடங்கி வருகின்றனா்.

‘நமஸ்தே’வுக்குப் பதில் ‘ஜெய்ஹிந்த்’:

சீன எல்லையை ஒட்டியுள்ள இந்தமாநிலத்தின் மக்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து வரவேற்கும் போது ‘நம்ஸ்தே’(வணக்கம்) என்பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறுகிறாா்கள். அருணாசல பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம், தேசப்பற்றுடன் திரும்பிச் செல்கிறோம். இந்தியாவின் மணி மகுடமாக இந்த மாநிலம் விளங்குகிறது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகு ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் ...

தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்ற ...

தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்றுசேர வேண்டும் ஈரோடு கிழக்கு சட்ட சபை இடை தேர்தலுக்காக அதிமுக ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...