மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து இருப்பதாக, விமானத்தில் பறந்த பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.

பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில், நேற்று நான்காவது நாள் நடந்த விமான கண்காட்சியில், பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா பங்கேற்றார். இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம் ஹெச்.டி.டி. – 40ல் துணை பைலட்டாக பயணம் செய்து அசத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

ஹெச்.டி.டி. – 40 பயிற்சி விமானம், நமது நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் தயாரிக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டு சார்புநிலையை தவிர்த்து நமது சுயசார்பு என்ற நிலையை குறிக்கிறது. கடந்த 2012 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில், இந்தியா சுவிஸ் பிலாட்டஸ் பயிற்சி விமானங்களை வாங்கியது. ஆனால் அதன் கொள்முதலில் நிறைய முறைகேடு இருந்தது.

இதுபற்றி கடந்த 2019ல் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பிலாட்டஸ் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவிற்கு உள்நாட்டு பயிற்சி விமானத்தின் அவசர தேவை ஏற்பட்டது.

அந்த சவாலான காலகட்டத்தில் ஹெச்.ஏ.எல்., நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஹெச்.டி.டி. – 40 விமானத்தை வடிவமைத்தது.

அப்போது திட்டம் மீண்டும், மீண்டும் பின்னடைவை சந்தித்தாலும், பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆதரவுடன் இந்த திட்டம் உயிர் பெற்றது.

இந்த விமானத்தில் பறந்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. சரியான கொள்கை, ஆதரவு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நமது விஞ்ஞானிகள் எடுத்து காட்டி உள்ளனர். இந்த சாதனை மறைந்த மனோகர் பாரிக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்து உள்ளது.

ஹெச்.ஏ.எல்., தலைமை வடிவமைப்பாளர்கள் சுமா பிரகாஷ், ராமானந்த் இல்லாமல் ஹெச்.டி.டி. – 40 வெற்றி சாத்தியம் இல்லை. அவர்களுக்கும், குழுவினருக்கும் நன்றி. விண்வெளி தொழில்நுட்பத்தில் நமது நாடு உலகளாவிய தலைவராக வளர்ந்து வருகிறது. பல நாடுகள் விரைவில் ஹெச்.ஏ.எல்., தயாரிப்பு விமானங்களை வாங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...