பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மல்யுத்தவீரர் மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றுள்ளது, மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதிசெய்தார்.
இந்நிலையில் வெற்றிகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நம் மல்யுத்த வீரர்களால் வெளிப் படுத்தப்பட்ட நம்பமுடியாத வடிவம். பதக்கப்பட்டியலில் மோஹித் கிரேவால் இணைந்துள்ளார். அவர் ஒரு வெண்கல பதக்கத்தை வீட்டிற்கு கொண்டுவரும்போது அவரது கூர்மையான கவனம் தனித்துநிற்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும்காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |