உங்கள் கனவு… அது எங்கள் கனவு

பாரலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திர ங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக கலந்துரையாடினார்.

ஒவ்வொருவருக்கும் இந்தநாள் மறக்க முடியாததாக அமைந்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிநடந்தது. இதில் அசத்திய இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 19 பதக்கங்கள் வென்றது. பதக்கம் கைப்பற்றிய தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் (வெள்ளி), ஈட்டி எறிதல்வீரர் ஜஜாரியா (வெள்ளி) உள்ளிட்ட நமது நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, தனது வீட்டில் சமீபத்தில் விருந்துகொடுத்து கவுரவித்தார். அப்போது ஒவ்வொருவரும் பாராலிம்பிக் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதன்சிறப்பு ‘வீடியோவை’ நேற்று ‘டுவிட்டரில்’ பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதில் இடம்பெற்ற சில சுவாரஸ்யங்கள். பாட்மின்டனில் தங்கம்வென்ற கிருஷ்ணா நாகர், தனது பதக்கத்தை கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அர்ப்பணித்திருந்தார். இதனை கேள்விப்பட்ட மோடி,”உங்கள்செயல் மனதை தொட்டது. அந்த தருணம் எப்படி இருந்தது,” என கேட்டார்

இதற்கு கிருஷ்ணா,”சுகாதார பணியாளர்கள் தங்கள் உடல்நலனை பற்றி கவலைப்படாமல் நாட்டுமக்களுக்காக சேவை செய்தனர். இந்தசெயல்தான் பதக்கத்தை அவர்களுக்காக அர்ப்பணிக்க துாண்டியது,”என்றார்.

ஈட்டி எறிதலில் வெள்ளிவென்ற ஜஜாரியா கூறுகையில், ”2004ல் ஏதென்சில் நடந்த பாராலிம்பிக்கில் தங்கம்வென்றேன். அப்போது ஏதென்ஸ் பயணசெலவுக்காக எனது அம்மா நகைகளைவிற்று உதவினார். பதக்கம்வென்ற பின் வாழ்க்கையே மாறிவிட்டது,” என்றார்.

பிரதமர் மோடியிடம் துப்பாக்கிசுடுதலில் தங்கம், வெண்கலம் வென்ற அவனிலேகரா கூறுகையில், ”டோக்கியோ போட்டிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சியில், ‘முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்படுங்கள். நெருக்கடிக்கு ஆளாகாதீர்,’ என நீங்கள் ஆலோசனை வழங்கினீர்கள். இதனை பின்பற்றியதால் இருபதக்கங்கள் கிடைத்தன,” என்றார்.

டேபிள் டென்னிசில் வெள்ளிவென்ற பவினா கூறுகையில்,”வைரஸ் காய்ச்சலால் துவக்க போட்டிகளில் சிரமப்பட்டேன். அப்போது டோக்கியோ வழியனுப்பும் நிகழ்ச்சியில் நீங்கள்சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தேன். எனது கடைசி ஒலிம்பிக் வாய்ப்பாக இருக்குமோ என பயந்தேன். இறுதியில் பதக்கம்வென்றேன்,”என்றார்.

இதற்கு பதில் அளித்த மோடி, ”எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காதீர். உங்களால் பலம்வாய்ந்த போட்டியாளரைகூட வெல்ல முடியும்,”என்றார்.

பிரதமர் மோடி பேசியது: உங்களிடம் இருந்து உத்வேகம், ஊக்கம்பெறுகிறேன். தோல்வி மனப்பான்மையை தோற்கடித்துள்ளீர்கள். அதுவே பெரியசாதனைதான். நீங்கள் செய்யும் சிறிய விஷயம் கூட நாட்டு மக்களுக்கு ஊக்கம்அளிக்கும். உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு ஊக்கம்தரலாம்.விளையாட்டை தவிர வேறு வழிகளிலும் நாட்டுக்காக ஏதாவது செய்யலாம். நல்லமாற்றத்தை விதைக்கலாம். நீங்கள் நாட்டுக்காக செய்யவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.

உங்களால் இந்தியமண்ணில் விளையாட்டு கலாசாரம் வளர்ச்சிஅடையும். நீங்கள் அனைவரும் நாட்டின் துாதர்கள். உங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் உலக அரங்கில் நாட்டின் கவுரவத்தை உயர்த்தி யுள்ளீர்கள். கடின உழைப்பு காரணமாக, அனைவரும் அறியும்

நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளீர்கள். உண்மையான விளையாட்டுவீரன் வெற்றி, தோல்வியை கண்டு சோர்வடையமாட்டான். தனது பயணத்தில் முன்னேறி செல்வான்.நீங்களும் வாழ்க்கையில் பலதடைகளை சமாளித்து சாதித்துள்ளீர்கள்.

உங்கள் மனஉறுதியை பாராட்டுகிறேன். உங்களது எதிர் காலம் பிரகாசமாக உள்ளது.உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். உங்கள்கனவு… அது எங்கள் கனவு.அதை நனவாக்க அனைத்து உதவிகளையும் செய்வேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...