உங்களுடன் பேசுவது பெருமையாக இருக்கிறது

இந்தியா 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையில், இந்திய விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், சர்வதேசசெஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.

பர்மிங்காமில் நடந்த 22வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி மொத்தமாக 61 பதக்கங்களை இந்தியாவிற்கு குவித்துகொடுத்தனர்.

குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். லான் பௌல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றனர். 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், காமன்வெல்த்தில் பதக்கம்வென்ற வீரர்கள், வீராங்கனைகளை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்து கௌரவப்படுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி. அந்த விருந்தின் போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்தவிருந்துக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் பேசுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்படி பெருமையாக இருக்குமோ, அப்படித்தான் எனக்கும் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒரேகுடும்பம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

நாடு 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் உங்களது கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை வென்றுகொடுத்து பெருமை தேடிதந்திருக்கிறீர்கள். காமன்வெல்த் மற்றும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆகிய இருபெரும் விளையாட்டு தொடர்களில் நமதுவீரர்கள், வீராங்கனைகள் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி நாட்டை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா புதிதாக 4 விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்அளிக்கும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...