குற்றம் குற்றமே பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு

தனது ஓய்வுவிடுதியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த 19 வயது இளம் பெண்ணை கொலைசெய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதி இடிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வினோத்ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற ஓய்வு விடுதி ஒன்றை நடத்திவந்தார். இந்த உணவு விடுதியில் அன்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள்கிழமை அன்கிதா காணாமல் போனதாக புல்கித் ஆர்யாவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கால்வாய் ஒன்றில் இருந்து அன்கிதா பண்டாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி சமூகவலை தளங்களில் நேற்று வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை விரைவுபடுத்தினர். விசாரணையில் அன்கிதாவின் கொலையில் அவர் வேலை பார்த்த விடுதியின் முதலாளியான புல்கித் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து இந்தகொலை தொடர்பாக புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டுபேர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், “வனாந்த்ரா ஓய்வுவிடுதி அமைந்திருக்கும் பகுதி வழக்கமான காவல் எல்லைகளின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இந்தப்பகுதி முக்கிய நகரமான ரிஷிகேஷில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இதுபோன்ற பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்ய ‘பத்வாரி’ (நிலவருவாய் அதிகாரி) அமைப்பு உள்ளது. அவர் காணாமல் போனவர் பற்றி வழக்கு பதிவு செய்தார். கொலையான பெண் காணாமல் போனதாக, ஓய்வு விடுதியின் முதலாளியான குற்றம்சாட்டப்பட்டவரே புகார் அளித்துள்ளார்.

மாவட்ட நீதிபதி இந்த வழக்கை வியாழக்கிழமை தான் எங்களிடம் மாற்றி உத்தரவிட்டார். இருபத்தி நான்குமணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். குற்றவாளியான ஓய்வு விடுதி உரிமையாளர் மேலும் இரண்டு நபர்களை கைதுசெய்துள்ளோம். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்துவருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான வனாந்த்ரா ஓய்வுவிடுதியை இடிக்க மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி உத்தரவிட்டார். மேலும் மாநிலத்தில் உள்ள மற்ற ஓய்வு விடுதிகளிலும் விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுமிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம், கொடுமையான குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்கமுடியாது என்று தெரிவித்தார்.

கொலை குற்றத்தில் கைதாகியுள்ள புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத்ஆர்யா தற்போது மாநிலத்தில் இலாகாஇல்லாத அமைச்சராக இருக்கிறார். முன்னதாக மாநில அமைச்சராக இருந்தவர் மண்பாண்ட வளர்ச்சிக்காக அமைப்பட்ட உத்தரகாண்ட் மாநில மட்டிகலா போர்டின் தலைவராக இருந்தார். புல்கித் ஆர்யாவின் சகோதரர் அன்கித் ஆர்யாவும் பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...