திறமைமிக்க மனித வளத்தின் தலைநகரம் இந்தியா

“உலகின் திறமைமிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த கருத்தரங்கம் பலவகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. சிலமாதங்களுக்கு முன்புதான் நாம் நமது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இதையடுத்து அமிர்தகாலம் தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் உலகப்பார்வை தற்போது வலுப்பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே நமதுநாட்டுக்கான தூதர்கள்தான். நான் அவர்களை அவ்வாறு அழைக்கவே விரும்புகிறேன். ஒருதூதராக உங்கள் பங்களிப்பு பலவகைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் எனும் அரசின் முன்னெடுப்புக்கான தூதர் நீங்கள், யோகா, கைவினை பொருட்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றுக்கும் நீங்கள் தான் தூதர்.

நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இன்று இந்தியா பார்க்கப்படுகிறது. உலகரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கிஒலிக்கிறது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கத்தை ஒருதூதரக நிகழ்வாக ஆக்க வேண்டும் என்பது மட்டும் அரசின் விருப்பவில்லை, மக்கள்பங்கேற்கும் நிகழ்வாக இதை மாற்ற விரும்புகிறோம். இந்தியா ஓர்அறிவு மையமாக மட்டும் திகழவில்லை; திறமைமிக்க மனித வளத்திற்கான தலைநகராகவும் திகழ்கிறது.

நமது இந்திய இளைஞர்களின் திறன்கள், மதிப்பீடுகள், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் இந்தத்திறமை மிக்க மனிதவளம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும்”

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 17-வது ஆண்டு கருத்தரங்கம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. எனினும், பிரதமர் நரேந்திர மோடி அதனை இன்று முறைப்படி தொடங்கிவைத்து. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...