மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்நோக்கம்

வாக்குவங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல் அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்நோக்கம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது: “நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்த பின்னர் இங்கு பெரியமாற்றங்கள் நடந்துள்ளன. முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் வாக்குவங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. மோடி தலைமையிலான அரசு மக்களை மகிழ்விக்கும் திட்டங்களை உருவாக்குதில்லை மாறாக அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குகிறது.

நாங்கள் ஜிஎஸ்டி கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாங்கள் டிபிடி (Direct Benefit Transfer) கொண்டுவந்த போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கண்டிப்பாக இடைத்தரகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இதுபோல தான் அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு கடினமானதாக இருந்தாலும் அவர்களின் நலன் சார்ந்தே அவைகள் இருக்கும்.

நீங்கள் ஒரு கொள்கையை புரிந்துகொள்வதற்கு அது உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த ஒரு கொள்கையையும் வாக்குவங்கியை மனதில் கொண்டு உருவாக்குவதில்லை. மாறாக பிரச்சினைக்கான முழுமையான தீர்வின் அடிப்படையில் உருவாக்குகிறோம்.

மோடி அரசு, பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் உருவாக்கப் படவில்லை. மோடி அரசானது கொள்கைகளின் அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

பொதுவசதி என்பதை நாம் கருத்தில் கொண்டால்,எங்களின் அரசு முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. அதிகாரிகள் பல்வேறு மட்டங்களில் இருந்துவரும் அறிவுரைகளை அவர்கள் பார்வையில் ஏற்றுக்கொண்டும், அதேநேரத்தில் முழுமையான கோணத்தில் அதனை ஆராய்ந்து, அதன்பின்னர் அந்த பகுதிக்கு ஏற்றவகையில் செயல்பட அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

,”எந்த ஒரு அரசிடமிருந்து நல்லவிஷயங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தசித்தாந்தம் கொண்ட அரசாங்கமாக இருந்தாலும், அதன் சிறந்த முடிவுகளை ஒரு நல்ல பத்திரிகையாளர் திறந்தமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் பத்திரிக்கையாளர் இல்லை சமூக செயல்பாட்டாளர். ஒரு சமூக செயல்பாட்டாளர் பத்திரிக்கையாளராகவோ, பத்திரிக்கையாளர் சமூக செயல் பாட்டாளராகவோ இருக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு பணிகள். அதனதன் நிலையில் இரண்டும் சிறந்தபணிகளே. ஒன்று இன்னென்றுடைய வேலையை செய்யும் போது பிரச்சினை உண்டாகிறது. இன்றைய நிலையில் இது மிகவும் அதிகரித்துள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...