கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்துப் பேசினார்.

இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உரை நமது தேசத்திற்கே வழிகாட்டுகிறது. அவருடைய உரை பெண்கள் சக்திக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் பழங்குடியின சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெருமை கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாடு தீர்மானத்துடன் கூடிய வெற்றி பெறுவதற்கு விரிவான செயல்திட்டத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார் என்று பிரதமர் கூறினார்.

சவால்கள் வரலாம், ஆனால் 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாட்டின் மூலம் நமது தேசம் அனைத்து தடைகளிலிருந்தும் மீண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது நம்நாடு அதனை எவ்விதம் எதிர்கொண்டது மற்றும் போர்க்கால சமயங்களில் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதுபோன்ற கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

உலக அளவில் இந்தியாவின் மீது நேர்மறையான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் உலக நிலைப்பாடு, இந்தியாவின் வளரும் திறன், இந்தியாவில் உருவாகும் புதிய வாய்ப்புகள் ஆகியவை இந்த நேர்மறையான ஸ்திரத்தன்மைமிக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார். நாட்டின் நம்பிக்கை சூழல் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் நிலையான அரசு உள்ளதாகத் தெரிவித்தார். கட்டாயப்படுத்துதல் மூலம் சீர்திருத்தங்கள் நடைபெறவில்லை என்று கூறிய அவர், அவை நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் செழுமையை உலக நாடுகள் காண்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக 2004- ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஊழல்கள் நடைபெற்றதாகவும், அதே நேரத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதாகவும் இந்தியப் பொருளதாரம் சரிவடைந்து இந்தியர்களின் குரல் பலவீனமாக இருந்தது என்றும் கூறினார். அக்காலகட்டம் வாய்ப்புகளில் ஏற்பட்ட துன்பம் என்ற நிலை நிலவியதாகத் தெரிவித்தார்.

நாடு தற்போது முழு தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதனுடைய கனவுகளும், உறுதிப்பாடுகளும். நிறைவேறி வருவதாகவும், உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்கியுள்ளதாகவும், இதற்கு இந்தியாவின் ஸ்திரத்தன்மையும், சாத்தியங்களும் காரணம் என்று குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியா 10 ஆண்டுகளில் இழந்ததாக அவர் கூறினார். தற்போது இது இந்தியாவின் 10 ஆண்டுகாலம் என்று மக்கள் அழைப்பதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், வலிமையான ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் வழிவகுக்கும் என்றும் இது தூய்மையாக்கலின் ஒரு அங்கம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இப்போது ஆரோக்கியமான விமர்சனங்களுக்குப் பதிலாக சில கட்டாயப்படுத்தப்பட்ட விமர்சனங்களைத் தெரிவிப்பதாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், ஆரோக்கியமான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலாக கட்டாயப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் முதன் முறையாக அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ள மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறினார். பரம்பரை ஆட்சியின் வாரிசாக இல்லாமல் தாம் 140 கோடி இந்தியர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதங்களே என்னுடைய பாதுகாப்பு அரண் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் திட்டப்பயன்கள் சென்றடைவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் மகளிர் சக்தி குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் மகளிர் சக்தியை வலுப்படுத்த எந்த முயற்சியும் ஈடுபடவில்லை என்றும் கூறினார். இந்தியாவின் தாய்மார்கள் வலுப்பெறும் போது மக்கள் வலுப்பெறுவதாகவும், மக்கள் வலுப்பெறும் போது, சமூகம் வலுவடைவதாகவும் இது நாட்டை வலுவடையச் செய்வதாகவும் தெரிவித்தார்.

நடுத்தர மக்களின் விருப்பங்களை அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அவர்கள் கௌரவத்துடன் வாழ வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் குடிமக்கள் முழு நேர்மறை சிந்தனையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்மறை போக்கை எதிர்கொள்ளும் திறன் இந்திய சமூகத்திற்கு இருந்த போதிலும், இந்த எதிர்மறைப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...