விளையாட்டுத் துறையை விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்

”விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. எனவேதான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.

அந்தநிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடிவரும் வேளையில், நாடு புதிய வரையறை களையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கிவருகிறது.

விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில்இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்.

பணம்இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இந்தஅரசு உறுதியாக உள்ளது. எனவேதான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு அளிக்கிறது.

விளையாட்டுத் துறைமீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.

கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவுஅளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால்தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2014க்கு முன், விளையாட்டு துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்றுமடங்கு அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...