சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக தில்லி வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கில் கட்டப்படவுள்ள யுக யுகத்திற்கான பாரதம் என்ற அருங்காட்சியம் தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை மற்றும் திறன்கட்டமைப்பு பயிலரங்கத்தைக் கலாச்சாரஅமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிலரங்கம் 2024 ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
நிறைவுநாளான நேற்று (29.06.2024) மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தற்குச் சான்றாக நிலைத்துநிற்கும் என்றார். இது அருங்காட்சியக அனுபவத்தைத்தாண்டி, அனைவரையும் உள்ளடக்கிய உணர்வைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார் . இதுமக்களின் அருங்காட்சியகமாக இருக்கும் என்றும், சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
புதுதில்லியின் ரைசினா மலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் மத்தியநிர்வாகப் பகுதியை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் புதிய தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1,54,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகத் திகழும்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |