தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை

‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான, ஒரு நபர் குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியது.

சந்துருவின் அறிக்கைக்கு எதிராக பாஜ செயற்குழு கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினோம். இதனால் சந்துரு வருத்தப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு விழாவில், இந்த அறிக்கை குறித்துப் பேசுகையில், நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி, இவற்றைப் பற்றி பாஜ.,வுக்கு என்ன தெரியும் என்று கூறியிருக்கிறார்.
எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், மோடி அரசுதான். நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம்.
அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது எதிர்க்கட்சிகளின் பணி.

திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம்.
சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு. மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...